மீள அமுல்படுத்தப்படவுள்ள விதிகள்

மீள அமுல்படுத்தப்படவுள்ள விதிகள்

இன்று முதல் மேல் மாகாணத்தில் போக்குவரத்து ஒழுங்கை விதிகள் மீள அமுல்படுத்தப்படவுள்ளது.

 

இதன்படி, பேருந்து முன்னுரிமை ஒழுங்கை விதி மொறட்டுவை முதல் புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தை வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

 

 இது குறித்து கண்காணிப்பதற்காக நாளாந்தம் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்தப்படும் காவல்துறை அதிகாரிகளுக்கு மேலதிகமாக, 500 மேலதிக அதிகாரிகளும் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.  

 

இன்று காலை 6 மணிமுதல் காலை 9 மணிவரையிலும், மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரையும் பேருந்துகளுக்கான முன்னுரிமை ஒழுங்கை விதி நடைமுறைப்படுத்தப்படும் என மேல்மாகாண சிரேஸ்ட பிரதி காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.