முல்லைத்தீவு பகுதியில் இரவு இடம்பெற்ற பயங்கர விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு பகுதியில் இரவு இடம்பெற்ற பயங்கர விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

முறிகண்டி - செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்புரம் பகுதி, A9 வீதியில் நேற்று (21.10.2023) இரவு 10 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு பகுதியில் இரவு இடம்பெற்ற பயங்கர விபத்து: ஒருவர் உயிரிழப்பு! | Road Accident Death In Mullaitibiபொலிஸார் நடவடிக்கை விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய கதிரவேலு லட்சுமனன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து வீடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த பார ஊர்தி மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே உயிரிழந்தும், படுகாயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு பகுதியில் இரவு இடம்பெற்ற பயங்கர விபத்து: ஒருவர் உயிரிழப்பு! | Road Accident Death In Mullaitibi

பொதுமக்களிற்கு இடையில் வாக்குவாதம் பார ஊர்தியின் சாரதி தப்பி சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸாருக்கும், பொதுமக்களிற்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு மாங்குளம் தலைமைப் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, குறித்த பகுதியில் பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.