காதலனுக்காக பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து காதலி அட்டகாசம்: பெண் அதிகாரிகள் காயம்..!

காதலனுக்காக பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து காதலி அட்டகாசம்: பெண் அதிகாரிகள் காயம்..!

அம்பலாங்கொடயில் பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்த யுவதியொருவர் இரண்டு பெண் பொலிஸ் அதிகாரிகளை கடுமையாக கடித்து காயப்படுத்தியுள்ளார்.

ஒரு அதிகாரியின் இடுப்பையும் மற்றுமொரு பொலிஸ் அதிகாரியின் விரலையும் இளம் பெண் கடித்ததில் காயம் ஏற்பட்டுள்ளது.

இரு பொலிஸ் அதிகாரிகளை கடித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு பலபிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக கடமையாற்றும் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் உத்தியோகத்தர்கள், குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சகோதரர்களை விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர்.

காதலனுக்காக பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து காதலி அட்டகாசம்: பெண் அதிகாரிகள் காயம் | Girlfriend Police Station Attack For Boy Boyfriend

இதன் போது இரு இளைஞர்களில் ஒருவரின் காதலி பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதுடன், குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.

அதனை கட்டுப்படுத்த சென்ற இரு பெண் பொலிஸாரையும் கடித்து காயப்படுத்தியுள்ளார்.

காதலனுக்காக பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து காதலி அட்டகாசம்: பெண் அதிகாரிகள் காயம் | Girlfriend Police Station Attack For Boy Boyfriend

படுகாயமடைந்த பொலிஸார் இருவரும் தற்போது பலப்பிட்டிய அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.