முச்சக்கரவண்டிகளைத் திருடி பெண்களுடன் உல்லாசம்; சிக்கிய நபர்.

முச்சக்கரவண்டிகளைத் திருடி பெண்களுடன் உல்லாசம்; சிக்கிய நபர்.

முச்சக்கரவணடிகளை திருடி, அதனை குறைந்த விலைக்கு விற்று அந்த பணத்தில்  பெண்களுடன்  சுற்றித்திரிந்த நபர் ஒருவரை தெமட்டகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் முச்சக்கரவண்டிகளைத் திருடி பேஸ்புக் ஊடாக மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்து,   அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பெண்களுடன் செலவிட்ட ஒருவரைக் கைது செய்துள்ளதாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கரவண்டிகளைத் திருடி பெண்களுடன் உல்லாசம்; சிக்கிய நபர் | Stealing Auto Flirting With Women Trapped Personசந்தேக நபர் 8 மாதங்களில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 21 முச்சக்கரவண்டிகளைத் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறைந்த விலைக்கு முச்சக்கரவண்டிகளை விற்பனை செய்ய கிரிபத்கொடைக்கு ஒருவர் வந்துள்ளதாக தெமட்டகொடை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில பண்டாரவுக்கு தகவல் கிடைத்ததனையடுத்து, சந்தேக நபரை கைது செய்துளனர்.

சந்தேகநபரிடம்  மேற்கொண்ட விசாரணைகளில்  இந்த திருட்டுச் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.