
தொழில் தேடி வந்த நபர் மர்மமான முறையில் உயிரிழப்பு.
சீதுவை அம்பலம்முல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளதோடு.62 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹங்குராங்கெத்த பிரதேசத்திலிருந்து தொழில் தேடி அப்பகுதிக்கு வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.