சிகை அலங்கார நிலையத்திற்குள் புகுந்த பேருந்து! இருவர் வைத்தியசாலையில்..!

சிகை அலங்கார நிலையத்திற்குள் புகுந்த பேருந்து! இருவர் வைத்தியசாலையில்..!

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் தானியகம பகுதியில் இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிறிலங்கா கடற்படை உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்துள்ளதாக சீனக்குடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தானியகம பிரதேசத்தில் சிறிலங்கா கடற்படைக்குச சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சிகை அலங்கார நிலையம் ஒன்றின் மீது மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்களில் ஒருவர் கடற்படை தளத்திற்குச் சொந்தமான வைத்தியசாலையிலும், பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகிறது.

சிகை அலங்கார நிலையத்திற்குள் புகுந்த பேருந்து! இருவர் வைத்தியசாலையில் | Bus Accident Trincomalee Batticaloa Main Road

சிகை அலங்கார நிலையத்துக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றும் சேதமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

விபத்து தொடர்பில் சீனக்குடா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.