இலங்கைக்கு தீர்மானம் மிக்கதாக மாறும் 27ஆம் திகதி..!

இலங்கைக்கு தீர்மானம் மிக்கதாக மாறும் 27ஆம் திகதி..!

இந்த ஆண்டுக்கான (2023) க.பொ.த உயர்தரப் பரீட்சையினை ஒத்திவைப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் பரீட்சைகள் நடைபெறவிருப்பதாக கூறப்பட்டு நேர அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பரீட்சையினை ஒத்திவைக்க இருப்பதாக கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தனது முகப்புத்தகத்தில் கூறிய விடயங்கள் பின்வருமாறு,

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு | 2023 Postponement Of Gec Advanced Level Exam

இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையினை ஒத்திவைப்பது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் ஏற்கனவே கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இப்போது 'ஜி77 மற்றும் சீன அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக அதிபர் கியூபாவிற்கு மேற்கொண்டுள்ள அரசியல் பயணங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர் இது தொடர்பான இறுதி முடிவுகள் எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.