அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் மீதான சைபர் தாக்குதல்.

அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் மீதான சைபர் தாக்குதல்.

அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் மீதான சைபர் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சர் கனக ஹேரத் விடுத்த அறிவித்தலுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் மீதான சைபர் தாக்குதல் | Cyber Attacks On Government Emails

கடந்த ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி நடந்த சைபர் தாக்குதலால், அமைச்சரவை அலுவலகம் உட்பட பல அரச நிறுவனங்களின் மின்னஞ்சல்களின் தரவுகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் தாக்குதல் தொடர்பில் தகவல் தொடர்பாடல் நிறுவனம் மற்றும் இலங்கை கணினி அவசர பதில் பிரிவிடம் இருந்தும் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக பதில் அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிடுகின்றார்.