மதிலில் மோதிய வேன்; அறுவர் நிலை கவலைக்கிடம்.

மதிலில் மோதிய வேன்; அறுவர் நிலை கவலைக்கிடம்.

ஹாலிஎல பிரதேச செயலகத்திற்கு முன்பாக வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மதிலில் மோதிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதிலில் மோதிய வேன்; அறுவர் நிலை கவலைக்கிடம் | Van Crashed Into The Wall Six People Are Worriedபண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் குழுவினர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் லுனுகலவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு பண்டாரவளைக்கு இன்று (17) காலை திரும்பிக்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் தந்தை, தாய் மற்றும் மூன்று மகள்கள் மற்றும் தந்தையின் சகோதரி ஆகியோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.