யாழில் ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி : பட்டப்பகலில் சம்பவம்..!

யாழில் ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி : பட்டப்பகலில் சம்பவம்..!

யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் ஆசிரியை ஒருவரின் தங்கச்சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவமானது இன்று(09) பகல் இடம்பெற்றுள்ளது.

பேருந்திற்காக காத்திருந்த வேளை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் ஆசிரியையின் சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி : பட்டப்பகலில் சம்பவம் | Chain Theft Jaffna

இது தொடர்பாக மருதங்கேணி காவல் நிலையத்தில் முறையிடப்பட்ட போது, உடனடியாக அவ்விடம் சென்ற மருதங்கேணி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.