இங்கிலாந்தில் இருந்து இலங்கை வந்த தமிழ் யுவதி தலைநகரில் உயிரிழப்பு!

இங்கிலாந்தில் இருந்து இலங்கை வந்த தமிழ் யுவதி தலைநகரில் உயிரிழப்பு!

கல்கிசை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர் உயரமான மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று (09) காலை இடம்பெற்றுள்ளதாக குறிப்படப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவரை முகநூல் மூலம் காதலித்து வந்த நிலையில் அல்விஸ் மாவத்தையில் உள்ள குறித்த வீட்டுத் தொகுதியொன்றை இணையத்தில் முன்பதிவு செய்து கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு வந்து தங்கியிருந்துள்ளார்.

அவர் நாளை (10) மீண்டும் இங்கிலாந்து செல்லவிருந்த நிலையில் இன்று அதிகாலை இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் இருந்து இலங்கை வந்த தமிழ் யுவதி தலைநகரில் உயிரிழப்பு! | Mount Lavinia Sucide Girl Dead 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்கிசை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.