இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் சாரதி பலி.

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் சாரதி பலி.

கொழும்பு - கண்டி வீதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிற்க்கப்பட்டுள்ளது.

கொழும்பில் - கண்டி வீதி பட்டாலிய கஜுகம என்ற இடத்தில் நேற்றிரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் சாரதி பலி | Driver Death In Two Buses Head On Collisionஇந்த விபத்தில் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் ஊழியர் போக்குவரத்து பேருந்து ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து காரணமாக ​​தடைப்பட்ட வீதியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.