பொலிஸார் போல வேடமிட்டு மோட்டார் சைக்கிள் மற்றும் கைபேசி கொள்ளை!
கந்தானை பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று தோற்றமளித்த நால்வர், ஒருவரின் மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசியின் பெறுமதி 3,50,000 ரூபா என கந்தான பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஜா -எல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026