மட்டக்களப்பில் மனைவியை கொலை செய்து சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கணவன் உயிரிழப்பு.

மட்டக்களப்பில் மனைவியை கொலை செய்து சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கணவன் உயிரிழப்பு.

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கணவன் கடந்த புதன்கிழமை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் மனைவியை கொலை செய்து சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கணவன் உயிரிழப்பு | The Husband Killed His Wife Died In Batticaloaகடந்த ஏப்ரல் மாதம் 13 ம் திகதி வந்தாறுமூலையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக 74 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அவர் சுகயீனம் காரணமாக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 23 ம் திகதி புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த 74 வயதுடைய வீரக்குட்டி தவராசாவின் உடல் பிரேத பரிசோதனையின் பின்னர் வெள்ளிக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.