
கொழும்பில் துப்பாக்கிசூடு - ஒருவர் படுகொலை..!
கொழும்பு, இரத்மலானை தொடருந்து நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர் தொடர்பான மேலதிக விபரம் வெளியாகவில்லை.
இந்த நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.