கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபரொருவரின் மோசமான செயல்! அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபரொருவரின் மோசமான செயல்! அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை..!

ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கத்துடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியேற முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று (18.08.2023) இரவு இந்தியாவின் மும்பைக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணிக்க தயாராக இருந்ததாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபரொருவரின் மோசமான செயல்! அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை | Katunayake Bandaranaike International Airport

சந்தேகநபர் தொடர்பில் சந்தேகமடைந்த இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் அவரை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபரின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.28 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.