யாழில் பகீர் சம்பவம்: சிசுவின் சிதைவடைந்த உடற்பாகம் மீட்பு!

யாழில் பகீர் சம்பவம்: சிசுவின் சிதைவடைந்த உடற்பாகம் மீட்பு!

யாழ்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் சிசுவின் சிதைவடைந்த சடலத்தின் உடற்பாகம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வண்ணார் பண்ணை பகுதியில் இன்றைய தினம் (10-08-2023) மாலை குறித்த சிசுவின் சடலம் மீட்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

யாழில் பகீர் சம்பவம்: சிசுவின் சிதைவடைந்த உடற்பாகம் மீட்பு! | Baby Recovered With Mutilated Body Part In Jaffna

குறித்த சடலத்தின் உடற்பாகம் அயலவர்களால் அடையாளம் காணப்பட்டடு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குற்றம் நிகழ்ந்த பிரதேசமாக அடையாளபடுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்துள்ள நிலையில் சட்ட வைத்திய அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து ஆராய்ந்துள்ளனர்.

யாழில் பகீர் சம்பவம்: சிசுவின் சிதைவடைந்த உடற்பாகம் மீட்பு! | Baby Recovered With Mutilated Body Part In Jaffna

மேலும், முதற்கட்ட விசாரணையில் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகாமையில் உள்ள கோம்பயன்மணல் சுடலைப் பகுதியில் இருந்து விலங்குகளால் எடுத்துவரப்பட்டிருக்குமா எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.