யாழ்ப்பாண சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

யாழ்ப்பாண சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

யாழ்ப்பாணத்தில் 33 சிறுவர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இவ்வாறு அடிமையானவர்கள் கடந்த இரண்டு மாதத்திற்குள்ளாகவே இவ்வாறு சீர் கெட்டு போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Shocking News About Jaffna Children

இந்த சிறுவர்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் அவர்களில் 11 பேர் ஹெரோயின் போதைப்பொருளுக்கும் 08 பேர் ஐஸ் போதைப்பொருளுக்கும் , 07 பேர் கஞ்சா போதைப்பொருளுக்கும் ஏனையவர்கள் போதை மாத்திரைகளுக்கும் அடிமையாகி உள்ளனர் என தெரிய வந்துள்ளது.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை(8) இடம்பெற்ற கூட்டத்தின் போதே அதிகாரிகளால் சிறுவர்கள் தொடர்பான மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.