திருகோணமலையில் யானை தாக்கி வயோதிபர் பலி..!
திருகோணமலை - கந்தளாய் பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (04) அதிகாலை இடம்பெற்றதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
யானையின் தாக்குதலினால் கந்தளாய் -பேரமடுவ பகுதியில் வசித்து வரும் 64 வயதான ஆர்.எம்.குணவர்தன என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வீட்டு முற்றத்திற்கு வருகை தந்த காட்டு யானையை விரட்டுவதற்காக முற்பட்டபோது யானை தாக்கியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதாகவும், பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கந்தளாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.