தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து - வெளியான காரணம்..!

தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து - வெளியான காரணம்..!

வவுனியா, ஈரப்பெரியகுளம் தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலையின் ஒரு பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று (21) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரென தீ பரம்பல் ஏற்பட்டதை அவதானித்த அங்கு கடமையில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கும், வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து - வெளியான காரணம் (படங்கள்) | Fire Accident In Vavuniya

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் இராணுவத்தினரின் துணையுடன் தீயை கட்டுப்படுத்த கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் தும்புத் தொழிற்சாலையின் இரு பகுதியில் தீப்பரம்பல் ஏற்பட்டுள்ளது. 

அறுவடையின் பின்னர் வயலுக்கு வைக்கப்பட்ட தீ பரவியே, தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இது தொடர்பில் ஈரப்பெரியகுளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து - வெளியான காரணம் (படங்கள்) | Fire Accident In Vavuniya

தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து - வெளியான காரணம் (படங்கள்) | Fire Accident In Vavuniya