கடலில் மூழ்கி இருவர் உயிரிழப்பு...!
கடலில் குளிக்கச் சென்ற இரண்டு பேர் கடலில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது நேற்றையதினம் (02.07.2023) புத்தளம் - நுரைச்சோலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
புத்தளம் - இலந்தையடி பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற மரங்குளி ஹிதாயத் நகரைச் சேர்ந்த கச்சு முஹம்மது சஹீத் (வயது 60) மற்றும் அஜ்வாத் சஹீர்கான் (வயது 22) ஆகியோரே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மூன்று இளைஞர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் அடித்துச் சென்றுள்ளனர்.
இதனை அவதானித்த இளைஞர்களின் தாத்தா குறித்த இளைஞர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு இருவரைக் காப்பாற்றி கரையில் விட்டுவிட்டு மற்றுமொருவரைக் காப்பாற்ற முயற்சித்த வேளை இளைஞன் மற்றும் இளைஞனின் தாத்தா இருவரும் நீரில் அடித்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில் இலந்தையடி பகுதியில் ஒருவர் சடலமாக கரையொதிங்கியுள்ளதுடன் மற்றுமொருவர் ஆலங்குடா கடற்கரைப் பகுதியில் சடலமாக கரையொதுங்கியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுரைச்சோலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.