ஆற்றில் குளித்த உறவினர்களான சிறுவர்களுக்கு நேர்ந்த துயரம்...

ஆற்றில் குளித்த உறவினர்களான சிறுவர்களுக்கு நேர்ந்த துயரம்...

 உறவினர்களான இரண்டு சிறுவர்கள் ஆற்றில் குளித்தவேளை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று மாலை ஸ்ரீபுர திஸ்ஸபுர பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆற்றில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கிய சிறுவர்கள் ஸ்ரீபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆற்றில் குளித்த உறவினர்களான சிறுவர்களுக்கு நேர்ந்த துயரம் | Drowning Claims Lives Of Two Childrenஸ்ரீபுர திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 12 வயது மற்றும் 15 வயதுடைய இருவரே உயிரிழந்தவர்களாவர்.

சிறுவர்கள் இருவரும் ஆற்றங்கரையில் உள்ள மரத்தில் இருந்து ஆற்றில் குதித்துள்ளதாகவும், இதன் போது அவர்களின் தலைகள் ஒன்றாக இடித்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஸ்ரீபுர காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Gallery