சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்க நிலவரம்...

சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்க நிலவரம்...

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை (gold price) ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று தளம்பல் நிலை நிலவுகிறது.

இதன்படி, இலங்கையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின்(ounce) விலை 588,016 ரூபாவாக பதிவாகியுள்ளது.

gold price

இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 165,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 152,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams) ஒன்றின் விலை இன்றையதினம் 145,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.gold price

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அதிர்ந்து போயுள்ளது.

ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.

புவி அரசியல் பிரச்சனை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்திவருவதாக குறிப்பிடப்படுகின்றது.