மசாஜ் நிலையம் என இயங்கிய விபச்சார விடுதிகள் - 12 யுவதிகள் கைது...

மசாஜ் நிலையம் என இயங்கிய விபச்சார விடுதிகள் - 12 யுவதிகள் கைது...

கடுவெல நகரில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் விபச்சார விடுதிகளாகச் செயற்பட்ட 4 இடங்கள் சுற்றிவளைக்கபப்ட்டு 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பில் 12 பெண்கள் உட்பட 16 பேரைக் கைது செய்ததாக கடுவெல காவல்துறையினர் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளின் அடிப்படையில் கடுவெல காவல் நிலையப் பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் வீரசிங்கவின் பணிப்புரையின் பேரில் நீதிமன்றத்தில் பெறப்பட்ட அனுமதியுடன் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மசாஜ் நிலையம் என இயங்கிய விபச்சார விடுதிகள் - 12 யுவதிகள் கைது | Brothel That Operated As A Massage Parlor

கைதுசெய்யப்பட்டவர்களில் 12 பெண்களும், விடுதிகளின் முகாமையாளர்களாக பணியாற்றிய நான்கு ஆண்களும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் கிரிதிவெல, பலாங்கொட, ஹங் வெல்ல, பியகம, பொலன்னறுவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

அதோடு இவர்களில் திருமணமான பெண்களும் அடங்குவதாக தெரிவித்த காவல்துறையினர், சந்தேக நபர்கள் கடுவெல நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.