இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலி!

இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலி!

ஹிக்கடுவை நகருக்கு அருகில் உள்ள கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று (07) மாலை நீரில் மூழ்கிய ரஷ்ய பிரஜை உயிர்காப்பு படையினரால் மீட்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 29 வயதான ரஷ்ய பிரஜை ஆவார்.

சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.