பாரிய அளவில் விலை குறைவடையவுள்ள யூரியா உரம் - விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்...

பாரிய அளவில் விலை குறைவடையவுள்ள யூரியா உரம் - விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்...

யூரியா உரம் விவசாயிகளுக்கு 1000 ரூபாவுக்கும் குறைவான விலைக்கு விற்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று (08) காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமரவீர, தற்போது விற்பனை செய்யப்படும் உரம் அரசாங்கத்தினால் அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட நிலையில், உரத்தின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

பாரிய அளவில் விலை குறைவடையவுள்ள யூரியா உரம் - விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் | Urea Fertilizer For Less Than 1000 Rupees

உலகளாவிய ரீதியில் உரத்தின் விலை குறைந்துள்ள அதேவேளை, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் வலுவடைந்துள்ளதை கருத்திற்கொண்டு இந்த குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

அடுத்த வாரத்துக்குள் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்தார்.