சூதாட்டத்தில் தந்தை - 16 வயது மாணவிக்கு நிகழ்ந்த பரிதாபம்..!

சூதாட்டத்தில் தந்தை - 16 வயது மாணவிக்கு நிகழ்ந்த பரிதாபம்..!

 

அகலவத்த காவல்துறை பிரிவுக்குற்பட்ட பகுதியில் சூதாட்டத்தில் விளையாடுவதற்காக வட்டிக்கு பெற்ற பணத்தை ஈடுசெய்வதற்காக தன்னுடைய மகளையே விற்ற தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலைக்குச் செல்லும் 16 வயதான மாணவியே இவ்வாறு விற்கப்பட்டுள்ளதாக அகலவத்த காவல்துறை சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

கலவானை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளி, அச்சிறுமியை ஒருவருடமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

சூதாட்டத்தில் தந்தை - 16 வயது மாணவிக்கு நிகழ்ந்த பரிதாபம்..! | Father Compensates His Daughter For Gambling

வட்டிக்கு பணம் கொடுக்கும் குறித்த முதலாளி, சிறுமிக்கு தொலைபேசி ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ள நிலையில் அந்த தொலைபேசி உறவினர் ஒருவரின் கைகளுக்கு சிக்கியதை அடுத்தே இந்தக் குற்றச்செயல் அம்பலமாகியுள்ளது.

மேலும், அந்த சிறுமி, தன்னுடைய மாமாவினால் இன்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சந்தேகநபரான தந்தை, நேற்று செவ்வாய்க்கிழமை (30) மாலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளியும், சிறுமியின் மாமாவும் பிரதேசத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

தாயும், தந்தையும் வீட்டுக்குள்ளேயே பல வருடங்களாக சூதாட்டத்தை நடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூதாட்டத்துக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளியான கலவானையைச் சேர்ந்த 38 வயதானவர், அவ்வப்போது இந்த வீட்டுக்கு வந்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான தந்தை, சூதாடுவதற்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளியிடம் பெற்ற பணத்துக்காக தன்னுடைய மகளையே பாலியல் செயற்பாட்டுக்காக வட்டி முதலாளியிடம் அனுப்பிவைத்துள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.