ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டங்களை நடத்துமாறு ஜனாதிபதி அறிவுரை - செய்திகளின் தொகுப்பு…!
நாடு பூராகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் 100 தொகுதிக் கூட்டங்களை நடத்துமாறு, அக்கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவிற்கு அறிவுரை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி, ஜூலை மாதமளவில் 80 கூட்டங்களை நடத்தி முடிக்க இயலும் என ரணிலிடம் பாலித வாக்குறுதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதிக் கூட்டங்கள் இப்போது நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்றன.
2024இல் இடம்பெறப் போகின்ற ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய தேசியக் கட்சியை கிராம மட்டத்தில் பலப்படுத்தும் நோக்கிலேயே இந்த கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றதாக கட்சி வட்டாரம் கூறுகின்றது.