22 ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்கும் வடக்கின் புதிய ஆளுநர்!

22 ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்கும் வடக்கின் புதிய ஆளுநர்!

புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை(22) இடம்பெறவுள்ளது.

காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

முன்னாள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கடந்த15ம் திகதி அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மே 17ஆம் திகதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.