வீதியில் குடைசாய்ந்து விபத்திற்குள்ளான பாரவூர்தி

வீதியில் குடைசாய்ந்து விபத்திற்குள்ளான பாரவூர்தி

பசறை நகரில் பாரவூர்தியொன்று வேக கட்டுப்பாட்டினை இழந்து வீதியில் குடைசாய்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் பலியானார். சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பசறை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த குறித்த பாரவூர்தி, முச்சக்கரவண்டி தரிப்பிடம் ஒன்றுக்கு அருகில் குடைசாய்ந்துள்ளது. இதன்போது காயமடைந்த மூன்று பேர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியாசலைக்கு மாற்றப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. எவ்வாறாயினும் ஏனைய இருவரும் தற்போது பசறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பசறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.