இன்று நண்பகல் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை

இன்று நண்பகல் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை இன்றைய தினம் நிகழ்த்த உள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிவி தெரண மற்றும் அத தெரண 24 தொலைக்காட்சியில் நண்பகல் 12 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரையினை நேரடியாக காணலாம்.

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதியின் முதல் தவணை இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ள நிலையில், ஜனாதிபதி அது தொடர்பாக உரையாற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது.