ஐந்து பேருக்கு மரண தண்டனை!

ஐந்து பேருக்கு மரண தண்டனை!

கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஐந்து பேருக்கு கேகாலை மாகாண மேல் நீதிமன்றம், இன்று மரண தண்டனையை விதித்தது.

2014ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைக்குற்றம் தொடர்பிலேயே இந்த தண்டனை இன்று வழங்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி கேகாலை, தெவலகம, கஹகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது ஒருவரை தாக்கி கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டு, குறித்த ஐவருக்கும் எதிராக சுமத்தப்பட்டிருந்தது.