ஒத்திகை நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

ஒத்திகை நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களின் அடிப்படையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்த ஒத்திகை நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது குறித்த ஒத்திகை நிகழ்வை அம்பலாங்கொடையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அம்பலாங்கொடை பிரதேசசபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் இந்த ஒத்திகை நிகழ்வு இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியது. இந்த ஒத்திகையின் போது, வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் விதம், வாக்காளர் ஒருவருக்கு வழங்கப்படும் கால எல்லை மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது குறித்த காரணிகள் ஆராயப்படுகின்றது. குறித்த தேர்தல் ஒத்திகைக்கு 200 பேர் கொண்ட குழுவினரை ஈடுபடுத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு முன்னர் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.