போதை மாத்திரைகளுடன் வைத்தியர் ஒருவர் கைது

போதை மாத்திரைகளுடன் வைத்தியர் ஒருவர் கைது

145 போதை மாத்திரைகளை வைத்திருந்த பதுளை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் நேற்று (14) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியர் பதுளை மைலகஸ்தன்னவில் உள்ள தனது தனியார் வைத்திய நிலையத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் யுவதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் காரும் போதைப்பொருளும் பதுளை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்குரிய வைத்தியர் இன்று (15) பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.