அமெரிக்காவில் பண்ணையொன்றில் துப்பாக்கிச் சூடு - எழுவர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் பண்ணையொன்றில் துப்பாக்கிச் சூடு - எழுவர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ஹாஃப் மூன் பே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

துப்பாக்கிச் சூடு நடத்திய 67 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் சீன நாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர்.
 

இதனிடையே, கலிபோர்னியாவின் லோஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள மான்டேரி பூங்காவில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.
 

சீன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் உள்ள உணவகமொன்றில் புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருந்த தருணத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
 

இதனையடுத்து துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஆசிய நாடொன்றைச் சேர்ந்த நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது சடலத்தை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.