குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

புத்தளம் - மதுரங்குளி, பாலசோலை பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் குறித்த குடும்பஸ்தர் தனது குடும்பத்தோடு மேற்படி தனியாருக்கு சொந்தமான தோட்டமொன்றில் குடியேறியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

முஹம்மது ஹனீபா முஹம்மது ஹூஸைன் எனும் 62 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

தனது மனைவியின் பிறந்தநாள் தினமான புதன்கிழமை இரவு குறித்த நபர் மனைவி மற்றும் நண்பர்கள் சகிதம் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட பின்னர், தோட்ட வீட்டிற்கு முன்னால் உள்ள மரமொன்றி சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுபற்றி மதுரங்குளி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குறித்த நபர் உயிரிழந்தமைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை எனத் தெரிவித்த மதுரங்குளி பொலிஸார், பிரேத பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான காரணங்கள் பற்றி தெரிவிக்க முடியும் எனவும் குறிப்பிட்டனர்.

குறித்த நபரின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று வெள்ளிக்கிழமை பிரேதப் பரிசோதனை நடைபெறும் எனவும் பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.