தனது ஊழியர்கள் ஆயிரம் பேரை தற்காலிகமாக பணிநீக்கம் செய்தது ஸ்ரீலங்கன் எயார் லைன்

தனது ஊழியர்கள் ஆயிரம் பேரை தற்காலிகமாக பணிநீக்கம் செய்தது ஸ்ரீலங்கன் எயார் லைன்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அந்த நிறுவனத்தில் உதவி ஊழியர்களாக பணிப்புரிந்து வந்த சுமார் ஆயிரம் பேரை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது. இந்த தீர்மானம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை அமுலில் இருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிப்புரிந்த 400 பேர் மற்றும் நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட வேறு நிறுவனங்களில் தொழில் புரிந்த 600 பேர் இவ்வாறு தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தவிர ஸ்ரீலங்கன் விமான சேவையில் பணிப்புரியும் அதிகாரிகளின் சம்பளத்தில் 25 வீதம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதுடன் இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் இணக்கம் வெளியிட்டுள்ளன. இந்த தீர்மானமும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.