
காலி முகத்திடல் கடலில் பலியான சிறுவன்!
காலி முகத்துவாரப் பகுதியில் கடலில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
நேற்று (07) மாலை மூன்று நண்பர்களுடன் நீராடச் சென்ற போதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
15 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறுவர்கள் கொழும்பு வாழைத்தோட்டம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025