ஒரு மாதத்தில் மட்டும் சிறைச்சாலைகளில் இருந்து மீட்கப்பட்ட கைபேசிகள் எவ்வளவு தெரியுமா?
கடந்த மாதத்தில் சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், 1102 மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறைகளில் கு்ற்றச்செயல்கள் திட்டமிடப்படுவதையடுத்து, கடந்த சில வாரங்களாக சிறைச்சாலைகளை ஒழுங்கமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதன்போது, 688 சிம் கார்டுகள், 1310 பட்டரிகள் மற்றும் 283 தொலைபேசி சார்ஜர்கள் மீட்கப்பட்டன.
மேலும் இந்த தொலைபேசிகளில் பெரும்பாலானவை வெலிக்கடை, நீர்கொழும்பு, மகர மற்றும் பூசா சிறைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கப்பட்டுள்ளது.