நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டு வரும் நபர்களுக்காக இவ்வருட இறுதி வரையான 6 மாதங்களுக்கு நீர் கட்டணங்களை தவணை முறையில் செலுத்துவதற்கு வாய்ப்பு வழங்குவதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுற்றுலாத்துறையினர் பொருளாதார ரீதியாக பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதன் காரணமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த சபையின் பொது முகாமையாளர் பியால் பத்மநாத தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாலிம்பட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீர் திருத்தப்பணிகள் காரணமாக நாளைய தினம் காலை 8 மணி தொடக்கம் 5 மணிவரையான 9 மணிநேரப் பகுதியில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி தியகஹ, கெகணுதுர, வெஹெரஹேன, கோட்டகொட, திக்வெல்ல மற்றும் குடாவெல்ல ஆகிய பிரதேசங்களுக்கு குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகத் தடை ஏற்படவுள்ளதாக குறித்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.