ஸ்ரீலங்காவில் மர்ம உயிரினம்! கொழும்பு பல்கலைக்கழக வானியல் பேராசிரியர் வெளியிட்டுள்ள தகவல்
ஸ்ரீலங்காவில் தெளிவாக அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்று நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான காணொளி ஒன்றும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை உட்பட பல பிரதேசங்களில் குறித்த உயிரினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, இது எந்த வகை உயிரினம் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் இது தொடர்பான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.