வவுனியாவில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை.

வவுனியாவில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை.

வவுனியாவில் முககவசங்கள் அணிந்து வீதிகளில் செல்லாமை உரிய முறையில் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை பின்பற்ற தவறியவர்களுக்கு எதிராக பொலிசார் கடுமையான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர் .

வீதிகளில் மோட்டார் சைக்கிள்கள் வாகனம் என்பனவற்றில் பயணிப்பவர்கள் உரிய முறையில் முககவசம் அணிந்து செல்லாதவர்களுக்கு எதிராகவே பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . இலங்கையில் கொரோனா இரண்டாவது அலை பெருக்கெடுக்க தொடங்கியுள்ளதை அடுத்து சுகாதாரத்துறையினர் பொலிசார் பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர் .

இதையடுத்து சுகாதார முறைகளை உரிய முறையில் பின்பற்ற தவறியவர்களுக்கு எதிராகவே இன்றைய தினம் நடவடிக்கையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.