அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் செல்லும் நபர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் செல்லும் நபர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் செல்லும் நபர்கள்  தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது,

மணல் ஏற்றிச் செல்ல நடைமுறையிலுள்ள அனுமதிப்பத்திர முறைமையை இடைநிறுத்த அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை இடைநிறுத்தி ரிட் ஆணையொன்றை பிறப்பிகக்குமாறு கோரி சூழலின் நியாயத்திற்கான கேந்திர நிலையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது,

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் ஏ எச் எம்  டீ நவாஸ் மற்றும் சோபித ராஜகருணா ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது,

எவ்வாறாயினும் கனிய வள சட்டத்தின் கீழ் மணல் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திர நடைமுறை தொடர்ந்தும் பின்பற்றப்படுவதாகவும் சட்டமா அதிபர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது,

தொடர்ந்தும் மணல் அனுமதிப்பத்திர நடைமுறையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் அதனை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டனர்,