நிறத்தால் நிராகரிக்கப்பட்ட பிரபல நடிகை! அடையாளம் தெரியாமல் ஸ்டைலாக மாறிய புகைப்படம்

நிறத்தால் நிராகரிக்கப்பட்ட பிரபல நடிகை! அடையாளம் தெரியாமல் ஸ்டைலாக மாறிய புகைப்படம்

பிரபல ரிவியில் கிராமத்து பெண்ணாகவும், நிறத்தை காரணம் காட்டி நிராகரிக்கப்படும் பெண்ணாக நடித்து வரும் கேப்ரில்லாவின் புதிய தோற்றம் ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.

பிரபல ரிவியில் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட தொடர் தான் சுந்தரி. கிராமத்து பின்னணி கொண்ட இந்த தொடரில் கேப்ரியலா, ஜிஷ்னு மேனன், ஸ்ரீகோபிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

குறித்த சீரியல் இல்லத்தரசிகளிடையே பெரும் வரவேற்பினை பெற்றதுடன், சுந்தரியாக நடிக்கும் கேபியை தங்கள் வீட்டு பெண்ணாகவே பார்க்கின்றனர்.

சமீபத்தில் கொடுத்த விருதில் இந்த சீரியல் பல விருதுகளை தட்டிச்சென்றது. இதில் சுந்தரி மற்றும் அவருக்கு பாட்டியாக நடிக்கும் நடிகைக்கும் விருது கிடைத்தது.

கருப்பு நிற தோற்றத்துடன் கிராமத்தில் இருந்து சென்னை வரும் இவர் கணவரின் சதியினால் வாழ்க்கை இழந்து நிற்கின்றார். ஆனால் தன்னுடைய விடாமுயற்சியை மட்டும் விடாமல் சோதனையை தகர்த்து வருகின்றார்.

கலெக்டருக்கு படித்துவரும் இவரை இந்த சீரியலில் கம்பெணி ஒன்றில் சிஇஓ-வாக நியமிக்கப்பட்ட வேளையில் தனது கிராமத்து சுந்தரி கெட்டப்பை மாற்றி மாடர்ன் சுந்தரியாக மாறி கலக்கியுள்ளார்.

தலைமுடி கட் செய்து முகமே வேறொரு நாயகி போல் பார்க்க தெரிகிறது. அவரது புதிய லுக்கை பார்த்த ரசிகர்கள் அட நம்ம சுந்தரியா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.