கொழும்பு பங்குச் சந்தை வளர்ச்சி
கொழும்பு பங்குச் சந்தை (CSE) இன்று ( 27) மீண்டு அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5.43% மற்றும் S&P SL20 சுட்டெண் 13.52% ஆக அதிகரித்தது.
இன்றைய வர்த்தக நிறைவின் போது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 375.12 புள்ளிகள் அதிகரித்து 7,280.52 ஆக பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், S&P SL 20 சுட்டெண் 287.46 புள்ளிகள் அதிகரித்து 2,413.42 ஆக இருந்தது.
இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தையில் இன்றைய நாளுக்கான மொத்த புரள்வு 2.18 பில்லியன் ரூபாவாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.