எரிபொருள் வாங்க சென்ற இருவர் உயிரிழப்பு

எரிபொருள் வாங்க சென்ற இருவர் உயிரிழப்பு

வென்னப்புவ மற்றும் தங்கொடுவ பிரதேசத்தில் எரிபொருள் வாங்க சென்ற இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (10) காலை வென்னப்புவ, வைக்கல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த ஒருவர், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வாகனத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொச்சிக்கடை பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதான இவர் சுற்றுலா வழிகாட்டி என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தங்கொடுவ பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு பஸ்ஸில் எரிபொருள் நிரப்புவதற்காக வந்த நபர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

47 வயதான இவர் கோனவில பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

வென்னப்புவ மற்றும் தங்கொடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.