எல்லை மீறிய கவர்ச்சியில் நடிகை சமந்தா! வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்

எல்லை மீறிய கவர்ச்சியில் நடிகை சமந்தா! வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்

கவர்ச்சி நாயகியாக மாறிவிட்ட சமந்தா தற்போது அட்டை படத்திற்காக கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தமிழ்நாட்டு பெண்ணான சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழ் சினிமாவை காட்டிலும் தெலுங்கில் பயங்கர பிஸியில் காணப்பட்டார்.

தெலுங்கில் முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்ட சமந்தா மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா நடித்த பானா காத்தாடி படத்தில் நடித்திருந்தார்.

பின்னர் கோலிவுட்டில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற நாயகர்களுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

படவாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கும் வேளையில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகசைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர் பட வாய்ப்பு குறையாமல் நடித்து வந்தார்.

பின்னர் சூப்பர் டீலக்ஸ் படத்தில் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருந்த சமந்தாவிற்கு பல விமர்சங்கள் எழுந்தாலும், பலரின் பாராட்டினைப் பெற்றார்.

இந்நிலையில் கடந்தாண்டு நடிகர் நாகசைதன்யா - சமந்தா இருவரும் திடீரென விவாகரத்து முடிவிற்கு வந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெறுவதாக சமூக வலைதளத்தில் அறிவித்தனர்.

விவாகரத்துக்கு பிறகு வேறொரு அவதாரம் எடுத்த கவர்ச்சி நாயகியாக வலம்வருகின்றார். அதோடு குடும்ப நாயகியாக வலம் வந்தவர் புஷ்பா படத்தில் ஐட்டம் சாங்கிற்கு குத்தாட்டம் போட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

சமீபத்தில் விருது விழாவில் அரைகுறை ஆடையுடன் சமந்தா வந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் பத்திரிக்கையின் அட்டை படத்திற்கு படு மோசமான போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.