பிரதமர் மஹிந்த பொறுப்பேற்கவுள்ள முக்கிய பொறுப்பு!

பிரதமர் மஹிந்த பொறுப்பேற்கவுள்ள முக்கிய பொறுப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றுக் கொள்வாரென அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுபேற்பதற்கு தகுதியான நபர் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இளம் தலைவர்களிடம் கையளிக்க உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.