பொதுத்தேர்தல் எப்போது? நாளை வெளிவரும் அறிவிப்பு
பொதுத்தேர்தல் நடத்தப்படும் திகதி நாளை அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்கான திகதி மற்றும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஐவரடங்கிய நீதயரசர்கள் குழு தீர்ப்பை வழங்கியுள்ளது.
அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை கடந்த 10 தினங்களாக தொடர்ந்தும் இடம்பெற்றன. பூர்வாங்கல் விசாரணைகள் நேற்று மாலை நிறைவடைந்த நிலையில், இன்று மனுக்களை தொடர்ந்தும் விசாரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் அறிவிக்கப்படுமென உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. அதற்கமைய அனைத்து மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பாராளுமன்றத் தேர்தல் பெரும்பாலும் எதிர்வரும் ஓகஸ்ட் 8 அல்லது 10 ஆம் திகதி நடத்தப்படலாம் என உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.