
எரிபொள் நிறப்பு நிலையங்களில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை
புத்தளம், ஆனமடுவ மற்றும் சாலியவெவ ஆகிய இடங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதற்றமான சூழல் ஏற்பட்டதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பல நாட்களாக எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் வரிசையில் நின்ற நிலையில் இடையில் புகுந்து எரிபொருள் பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் நபர்களால் இந்த பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
சிலர் டீசல் எடுப்பதற்காக கொண்டு வந்த கேன்கள் மற்றும் போத்தல்களில் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கின்றனர்.
மட்டுப்படுத்தப்பட்ட டீசல் விநியோகமே மோதல்களுக்கு முக்கிய காரணம் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எப்படியிருப்பினும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கிய போதிலும், மோதல்கள் இடம்பெற்ற சந்தர்ப்பங்களில் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.